தலைமன்னார் – வடக்கு பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட 10 வயது சிறுமி, கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன் அவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளானமைக்கான அறிகுறிகள் காணப்படுவதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன் முன்னிலையில் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க