இந்தோனேசியாவில் நேற்று (14.02) நடைபெற்ற பொதுத்தோ்தலில், பாதுகாப்பு அமைச்சா் பிரபோவோ சுபியாந்தோ (Prabowo Subianto) முன்னிலை வகிக்கின்றார்.
பிரபோவோ சுபியாந்தோ 55 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அவருக்கு எதிராக போட்டியிட்ட Anies Baswedan மற்றும் Ganjar Pranow ஆகியோர் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ முடிவுகள் வரும் வரை பிரபாவோ சுபியாந்தோ வெற்றி பெற்றதாக ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளனர்.
எனினும், உத்தியோகபூர்வ வாக்கு எண்ணிக்கை முடிவடைய பல வாரங்கள் ஆகக்கூடும் என தெரிகிறது.
கருத்து தெரிவிக்க