இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் நிதியமைச்சிற்கும்  இடையில் முக்கிய கலந்துரையாடல்!

இன்று திங்கட்கிழமை (12) சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்களை உள்ளடக்கிய உத்தியோகபூர்வ குழுவிற்கும் நிதியமைச்சிற்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

இக்கலந்துரையாடலின் போது எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இரண்டு தடவைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

தமது பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் நாளை செவ்வாய்க்கிழமை (13) பாரிய வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நாளை முன்னெடுக்கப்படவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் அகில இலங்கை தாதியர் சங்கத்தினரும் கலந்துகொள்ள தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

கருத்து தெரிவிக்க