Uncategorizedசமீபத்திய செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

சிலியின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் பலி

தென் அமெரிக்காவின் சிலி என்னும் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி விபத்தில் உயிரழந்துள்ளார். இவர் இரண்டு தடவை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். ஜெபஸ்டின் பினிரா 2010 தொடக்கம் 2014 வரை முதல் தடவையாகவும்,2018 தொடக்கம்2020 வரை இரண்டாம் தடவையாகவும் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார். சுற்றுலாத்தலமான லகோ ரங்கொ எனும் பகுதியில் நேற்று (06.02) ஹெலிகாப்டரில் பயணம் செய்த வேளையில் ஜெபஸ்டின் உட்பட 04 பேருடன் ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜெபஸ்டின் பினிரா உயிரழந்துள்ளதுடன் ஹெலிகாப்டரில் பயணித்த மேலும் மூன்று பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டெடுத்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாக வில்லை.

கருத்து தெரிவிக்க