இலங்கையின் 76 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கை அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கபட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக பொது மன்னிப்பு அடிப்படையில் 754 சிறைகைதிகள் நேற்று (04.02) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதில் 729 ஆண் கைதிகளும், 25 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் காமினி திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி யாழ்ப்பாணத்தில் 22 கைதிகளும் மட்டக்களப்பில் 27 கைதிகளும் நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளதகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க