சினிமாசினிமா

சக்தி இசைக்குழுவிற்கு இசைத்துறையின் உயர் விருதான கிராமி விருது!

இசைத்துறையின் உயர் விருதான கிராமி (Grammy Awards) விருது வழங்கும் நிகழ்ச்சி அமெரிக்காவில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் சக்தி அல்பத்திற்கு கிராமி விருது வழங்கப்பட்டுள்ளது. சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இணைந்து 8 பாடல்கள் கொண்ட அல்பமாக உருவாக்கியுள்ளனர் .

This Moment அல்பத்தில் இடம்பெற்றுள்ள சக்தி இசைக்குழுவின் பாடல்களுக்கு உலகின் சிறந்த அல்பம் பிரிவில் கிராமி விருது கிடைத்துள்ளது. விருதுபெற்ற சக்தி இசைக்குழுவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

கருத்து தெரிவிக்க