சினிமாசினிமா

600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’

‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இந்த படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். தீபக் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிவன் நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் முதல் பாடல் வெளியாகி கவனம் பெற்றது.

இந்நிலையில் சந்தானம் நடித்த படங்களிலேயே அதிக திரையில் வெளியாகும் முதல் திரைப்படம் என்ற பெருமையை வடக்குப்பட்டி ராமசாமி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் உலகமுழுவதும் உள்ள 600-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

கருத்து தெரிவிக்க