சினிமாசினிமா

சர்வதேச அரங்கில் ‘விடுதலை’க்கு கிடைத்த பாராட்டு

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கவுதம் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. இந்த படம் கடந்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. முதல் பாகத்தின் இறுதியில் இரண்டாம் பாகத்தின் சில காட்சிகள் இடம்பெற்று படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறவைத்தது.

இதற்கிடையே கடந்த மாதம் 25ம் தேதி நெதர்லாந்தில் 53வது சர்வதேச ரோட்டர்டாம் திரைப்பட விழா தொடங்கியது. இதில் பங்கேற்க வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை’ படமும் ராம் இயக்கிய ‘ஏழு கடல் ஏழு மலை’ படமும் தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் ‘விடுதலை’ படத்தின் இரண்டு பாகங்களும் இந்த விழாவில் திரையிடப்பட்டது. படங்களை பார்த்த பார்வையாளர்கள் எழுந்து நின்று தொடர்ந்து 5 நிமிடங்கள் கைதட்டி பாராட்டியுள்ளனர். இதுகுறித்த வீடியோவை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. சர்வதேச அரங்கில் கிடைத்த இந்த வரவேற்பால் படக்குழு மிகுந்த உற்சாகமடைந்து உள்ளது.

 

கருத்து தெரிவிக்க