இலங்கைஉள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தை கைவிடும் இலங்கை அரசாங்கம்

 

கட்டுநாயக்க, மத்தள மற்றும் இரத்மலானை விமான நிலையங்களை இந்திய நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த விமான நிலையங்களின் புறப்படும் முனையங்களை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மேம்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகை 106 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 102,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்த போதிலும், நேற்று வரை 201,683 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலாத்துறை  அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஸ்திரமான நாட்டிற்கு அனைவரும் ஒரே பாதையில் என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.இலங்கையில் 15,000 நட்சத்திர ஹோட்டல் அறைகள் மற்றும் 40,000 மற்ற ஹோட்டல் அறைகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலா வலயங்கள்

2030ஆம் ஆண்டுக்குள் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை நான்கு மில்லியனாக உயர்த்தும் வகையில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போதுள்ள 49 சுற்றுலா வலயங்களை எதிர்காலத்தில் 64 ஆக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் இலங்கைக்குள் இரண்டு விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க