இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி பெண்ணொருவர் கைது

கனடாவில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவதாகக் கூறி வேலை தேடுபவர்களிடம் இருந்து  60 மில்லியன் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த பெண் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை, குடாதண்டா வீதியில் வசிக்கும் 37 வயதுடைய குற்றம் சாட்டப்பட்டவர், நாடு முழுவதும் உள்ள வங்கி அதிகாரிகள், சட்டத்தரணிகள் மற்றும் பிற தொழில் வல்லுநர்களை குறிவைத்திருந்தமை தெரியவந்துள்ளது.

இருப்பினும், தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால், பேலியகொடவைச் சேர்ந்த மீன் வியாபாரி ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திக்கு புகார் அளித்ததால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

ஆரம்ப விசாரணைகள் மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட 16 முறைப்பாடுகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர்  60 மில்லியன் ரூபாய்க்கும் மேலதிகமான மோசடி நடவடிக்கைகள்  மேற்கொண்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

எனவே கனேடிய வேலை வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதாக பண மோசடி  குற்றச்சாட்டில் சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜனவரி 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க