ஜோதிடம்

இன்றைய நாள் எப்படி (2024-01-27)

மேஷ ராசி

இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களு டன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.

ரிஷப ராசி

எதிர்பாராத பணவரவு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத் துணையால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய் வழி உறவினர்கள் வகை யில் சுபச்செலவுகள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு அதிர்ஷ்ட வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

மிதுன ராசி

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை கள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். துர்கையை வழிபடுவதன் மூலம் முயற்சிகளில் வெற்றி பெறலாம்.

கடக ராசி

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு உறவினர்கள் வகையில் எதிர் பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். சிலருக்கு வீட்டில் தெய்வவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்ப டும். பிள்ளைகளால் சங்கடங்கள் ஏற்படும். சிவவழிபாடு காரியங்களை அனுகூலமாக்கும்.

சிம்ம ராசி

தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கணவன் – மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

கன்னி ராசி

மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்படும். குடும்ப விஷயமாக சற்று அலைச்சலும் சோர்வும் ஏற்படும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். உறவினர்களால் குடும் பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் மனஅமைதி உண்டாகும்.

துலா ராசி

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் கூடும்.

விருச்சிக ராசி

உற்சாகமான நாள். உறவினர்கள் வகையில் புதிய ஆடை, ஆபரணங் களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். புதிய முயற்சிகளைத் தவிர்க் கவும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு ராசி

உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தேவையான பணம் இருந்தாலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். மகான் ராகவேந்திரரை வழிபட மனஉளைச்சல்கள் நீங்கும்.

மகர ராசி

முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும். மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம். எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் சங்கடங் கள் குறையும்.

கும்பராசி

அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பின்னர் முடிந்துவிடும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

மீனராசி

அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிக்கு வாழ்க்கைத் துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும். முருகப்பெருமானை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கருத்து தெரிவிக்க