இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இ‌ன்றைய வா‌னிலை அறிக்கை

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.

 

வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

 

நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.

 

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க