சினிமாசினிமா

வெப் தொடராகும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை

தேச தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை திரைப்படங்களாகவும், வெப் தொடர்களாகவும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளன. அந்தவகையில் தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தியின் வாழ்க்கை படம் வெப் தொடராக தயாராகிறது. பாலிவுட்டின் முன்னணி இந்தி டைரக்டரான ஹன்சால் மேத்தா இந்த வெப் தொடரை இயக்குகிறார். படத்துக்கு ‘காந்தி’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.

வரலாற்று ஆசிரியரும், எழுத்தாளருமான ராமச்சந்திர குஹா எழுதிய புத்தகங்களை அடிப்படையாக கொண்டு இந்த வெப் தொடர் தயாராகிறது. இதில் காந்தியாக பிரதிக் காந்தி காந்தி நடிக்கிறார். ‘ஸ்கேம் 1992’, ‘பாய்’ ஆகிய படங்களை தொடர்ந்து ஹன்சால் மேத்தா-பிரதிக் காந்தி 3-வது முறையாக இணைகிறார்கள். தற்போது காந்தி படப்பிடிப்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Also Readநடிகர் பார்த்திபனின் அடுத்த பட டைட்டில் வெளியீடு

கருத்து தெரிவிக்க