இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் , சமுர்த்தி மற்றும் வறிய மக்களுக்கான நலன்புரி கொடுப்பனவுகளை வழங்கும் செயற்பாடுகளுக்கே வரி வருமானம் போதுமானதாக உள்ளது என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக அமையத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

2022 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 1,751 ரூபாவாகும். அதில் 1265 பில்லியன் ரூபா அதாவது 72% அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்பட்டது. எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க