2023 ஆம் ஆண்டு பல்வேறு மனித நடவடிக்கைகளால் 474 காட்டு யானைகளும் இறந்துள்ளதாகவ இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுமதியின்றி மின் கம்பிகள் பதிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 50 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சுமார் 6,000 காட்டு யானைகள் வாழ்ந்து வருவதாகவும் யானைகள் குறித்த சட்டவிரோத செயல்கள் தொடர்பில் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மின்சார சபை, அதற்கு மக்களின் ஆதரவும் தேவை எனவும் தெரிவித்துள்ளது.
வேலிகள் அல்லது கம்பிகளுக்கு அனுமதியின்றி மின்சாரம் வழங்கப்படுவது தொடர்பில் 1987 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இலங்கை மின்சார சபைக்கு உடனடியாக அறிவிக்குமாறு மக்களிடம் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க