சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்ட குழு ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கையின் வடமாகாணத்திற்கு விஜயம் செய்து, வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ல்ஸ் மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார முக்கிய பங்குதாரர்களையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளையும் சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆளுநரின் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுடன யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் (SME) பிரதிநிதிகள் ஒன்றிணைந்தனர்.
தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள், போதிய உள்கட்டமைப்பு, காலநிலை மாற்ற பாதிப்புகள் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதில் உள்ள சிரமங்கள் உள்ளிட்ட அழுத்தமான பிரச்சினைகள் குறித்து வட மாகாண ஆளுநர் சார்ல்ஸ் IMF குழுவிடம் விளக்கினார்.
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள், கொவிட்-19 தொற்று, பொருளாதார நெருக்கடி மற்றும் அண்மைய வரி அதிகரிப்புகள் போன்றவற்றால் முன்வைக்கப்பட்டுள்ள சவால்களை எடுத்துரைத்து, தற்போதைய பொருளாதார நிலைமை பற்றிய பகுப்பாய்வை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த பீட்டர் ப்ரூயர் தலைமையிலான IMF பிரதிநிதிகள் குழு, வரி அதிகரிப்பால் ஏற்பட்ட கஷ்டங்களை ஒப்புக் கொண்டதுடன், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளை சமாளிக்க கடுமையான பொருளாதாரக் நடவடிக்கையின் தேவையை விளக்கியதுடன் இந்த கொள்கைகளை தக்க வைத்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
கருத்து தெரிவிக்க