வற் வரிக்கு மேலதிகமாக 16 வகையான வரிகளை அறவிடுவதாக இறைவரி திணைக்களம் தெரிவிக்கிறது. தொடர்ந்தும் மேலதிகமாக சில பொருட்களுக்கு விதிக்கப்படும் ஏனைய விசேட வரிகள் தொடர்ந்தும் அறவிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் இரண்டரை சதவீதம் வசூலிக்கப்பட தேசத்தை கட்டியெழுப்பும் வரியில் 5 சதவீதத்தை தனியார் மின்சார நிறுவனம் வசூலித்துள்ளதாக மின்சார நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலதிகமாக விற்பனை வரி, துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி, சமூக பாதுகாப்பு வரி, கட்டுமான வரி, சுங்க வரி, முத்திரை வரி, தொலைத்தொடர்பு வரி, என பல வகையான வரிகள் வற் வரியுடன் சேர்த்து வசூலிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வற் வரியை அமுல்படுத்துவதுடன் எவ்வாறான வரிகளை நீக்குவது என்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க