சினிமாசினிமா

பரபரப்பை ஏற்படுத்திய “ரகு தாத்தா” டீசர்

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடித்துள்ள படம் ரகு தாத்தா. எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில், என்.சி.சி பயிற்சியில் ஹிந்தியில் பேசும் போது, ‘தமிழ்ல சொல்லுங்க சார் எனக்கு ஒண்ணுமே புரியல’ என்று சொல்ல தொடங்கி படம் முழுக்க ஹிந்திக்கு எதிர்ப்பை பதிவு செய்யும் காட்சிகளில் நடித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

‘ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்துவது என்னுடைய கருத்து. வெகுஜனங்களுக்கு போய் சேர வேண்டும் என்றால் நான் மெட்ராஸ் போக வேண்டும்’ என்று சொல்வது என கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த காலகட்டத்தில் இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. அத்தோடு ‘அத்தனை எதிர்ப்புகளையும் மீறி ஹிந்தி தெரியாது போய்யா என்று சொல்லுவோம்’ என கீர்த்தி சுரேஷ் பேசும் வசனம் இந்த டீசரில் அமைந்திருக்கிறது. இப்படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளது.

Also Read‘பூமர் அங்கிள்’ படத்தின் ட்ரைலரை வெளியீடு

 

 

 

கருத்து தெரிவிக்க