அழகு / ஆரோக்கியம்

ஏன் சம்மணமிட்டு சாப்பிட வேண்டும்?

தமிழர் கலாச்சாரங்களில் முக்கியமானது சம்மணமிட்டு அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது. ஆனால் தற்காலத்தில் டைனிங் மேசை  என்பது அத்திய அவசியமாகிவிட்டது . விருந்தினர்களை கதிரைகளில் அமரச் செய்து உணவு பரிமாறுவது தான் நாகரீகம் என்றாகிவிட்டது.

 

நம் முன்னோர்கள் சம்மணமிட்டு சாப்பிட்டதன் நோக்கம், கீழே அமர்ந்து சாப்பிடுவதன் மூலம், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல், முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று உணவு செறிமானம்  நன்றாக நடைபெறுவதால், ஆனால் தற்போது நாம் டைனிங் டேபிளில் நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால் ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது. மாறாக காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு சென்று, சக்தியும், ஆரோக்கியமும் கிடைக்கிறது. எனவே தான் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது முக்கியமாக முன்னோர்களால் கடைப்பிடிக்கப்பட்டது.

 

கருத்து தெரிவிக்க