விளையாட்டுவிளையாட்டு செய்திகள்

கண்ணீருடன் விடைபெற்றார் டேவிட் வோர்னர்

தனது இறுதி டெஸ்ட் போட்டியில் விளையாடிய டேவிட் வோர்னர் பேட்டியின்போது திடீரென பேச முடியாமல் கண்ணீர் சிந்திய காட்சிகள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்திருந்த டேவிட் வோர்னர் தனது துடுப்பாட்டத்தின் மூலம் ரசிகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்ததாக நம்புவதாக தெரிவித்துள்ளார். இந்த நாள் கனவு நிஜமானதை போல் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 3-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளோம். கடந்த 18 மாதங்களில் அவுஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு மிகச்சிறந்த நாட்களாக அமைந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பாகிஸ்தான் அணி சார்பில் கார்ட் ஆஃப் ஹானர் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ரசிகர்களுக்கு நன்றி கூறிய அவர், மகள்களை கட்டியணைத்து நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சிட்னி மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஹெல்மெட்டை கழற்றி கைகளை உயர்த்தி அரங்கத்தை நோக்கி நடந்து சென்று  அரங்கத்தில் அருகில் இருந்த சிறுவன் ஒருவனுக்கு தனது தலைக்கவசம், கையுறைகளை கழற்றி பரிசாக அளித்தது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கருத்து தெரிவிக்க