சினிமா

தெருக்கூத்துக் கலையுலகிற்கு ஒரு பேரிழப்பு.

இருங்கூர் நாராயணன் வாத்தியார் என்றால் அறியாத தெருக்கூத்துக் கலைஞர்களோ, தெருக்கூத்து ஆர்வலர்களோ இல்லை. நாராயண நாயக்கர் மகனாகவும் மாணவனாகவும் விளங்கியவர் இருங்கூர் இராமலிங்கம் வாத்தியார் அவர்கள்.

தன் தந்தை தெருக்கூத்துக் கலையால் எடுத்த பெயரை சற்றும் குறையாமல் தனக்குரியதாக்கிக் கொண்ட பெருமை இராமலிங்க ஐயாவுக்கு உண்டு. வாழும் காலத்தில் துச்சாதனன், துரியோதனன், கர்ணன், தபசுமரம் ஏறும் களத்தில் அருச்சுனன், இரணியன், குறிப்பாக கண்ணன் முதலான மகாபாரத கதாப்பாத்திரங்களை கண்முன் காட்டும் மகா கலைஞன் இருங்கூர் இராமலிங்கம் ஐயாதான். இத்தகைய மகா கலைஞன் இன்று மாரடைப்பால் இறந்தார் என்ற செய்தி துயரத்தை அளிக்கிறது.

எத்தனை இலட்சம் மக்களின் கனவு நாயகனாக விளங்கிய கலைஞன். பல இலட்சம் தெருக்கூத்துக் கலை ஆர்வலர்களின் கனவுகளையும் நினைவுகளையும் ஒரு தெருக்கூத்துக் கலைஞனின் இறப்பு சுக்குநூறாகத் தகர்த்துவிட்டதே. இவரின் இழப்பு கலையுலகின் பேரிழப்பே.

கருத்து தெரிவிக்க