2024 சரும பராமரிப்பு குறிப்புகள் குறித்து கவனிக்க வேண்டிய நேரம் இது. 2023 ஆம் ஆண்டில் சருமத்துக்கு க்ளென்சிங், டோனிங், மொய்சரைசிங் போன்ற சரும பராமரிப்புகளை நீங்கள் தவறியிருக்கலாம். சருமத்துக்கு அறியாமல் பல தீங்கு விளைவிக்கும் செயல்களை செய்திருக்கலாம். சரும பராமரிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கலாம். வரும் வருடம் உங்கள் சருமத்தை அழகாக பாதுகாக்க விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
- முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்
சரும பராமரிப்பு வழக்கத்தில் முக்கியமானவை தோல் சுத்தப்படுத்துதல். தினமும் காலையில் மேக் அப் பயன்படுத்துவதற்கு முன்பு குறைந்தது மொய்சரைசர் செய்தாலும் கூட முகத்தை சுத்தம் செய்யுங்கள். இரவு படுக்கைக்கு செல்லும் முன்பும் முகத்தை சுத்தம் செய்யுங்கள்.
சரும சுத்தம் செய்யும் போது முகம் சுத்தமாக இருக்க வேண்டும். மொய்சரைசர் அல்லது மேக் அப் பயன்படுத்த வேண்டாம். உங்கள் தோல் வகைக்கேற்ப சரியான ஒன்றை பயன்படுத்துங்கள். முகத்தை சுத்தம் செய்ய ஈரப்பதமூட்டும் மென்மையான க்ளென்சர் பயன்படுத்துங்கள்.
- தினமும் சஸ்க்ரீன் அவசியம்
ஒவ்வொரு நாளும் சன்ஸ்க்ரீன் போடுவது அவசியம். பருவநிலை மாறினாலும் வெயில் இல்லை. குளிர்காலம், மழைகாலம் என்று ஒதுக்கிவைக்காமல் எல்லா காலங்களிலும் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். வீட்டிலிருந்தாலும் வெளியில் சென்றாலும் புற ஊதாக்கதிர்வீச்சு சருமங்களை பாதிக்க செய்யலாம். அதனால் தினசரி சன்ஸ்க்ரீன் போடுவது அவசியம். எண்ணெய் இல்லாத இலகுவான 50+++ spf அளவுக்கு மேல் பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லது.
- கழுத்துபகுதியைமறந்துவிடவேண்டாம்
கழுத்துக்கு முன்னுரிமை கொடுப்பது தோல் பராமரிப்பு வழக்கத்தில் முக்கியமானது. தோல் பராமரிப்பு செய்யும் போது முகம் மட்டுமே கவனிக்கப்படுகிறது கழுத்து பகுதியில் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் தோல் முதிர்ச்சியடையும் போது முகம் தாண்டி கழுத்துப்பகுதியில் வயது காட்டி கொடுத்துவிடுகிறது. அதனால் வழக்கமான தோல் பராமரிப்பு முறையின் ஒரு பகுதியாக இரவும் பகலும் மொய்சரைசர் பயன்படுத்துவது கழுத்து பகுதியையும் பளபளப்பாக வைக்க உதவும்.
கருத்து தெரிவிக்க