தலைமுடி நீளமாக, அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாகவும் இருக்கும். நீளமாக இல்லாவிட்டால் கூட முடி உதிராமல் இருக்க வேண்டும் என்பது பலருடைய விருப்பம் என்பதில் சந்தேகம் இல்லை.
முடி கொட்டுவது அதிகமாவதற்கு நாம் தலைமுடியை பராமரிக்கும் போது செய்யும் தவறுகள் காரணமாக இருக்கின்றன. அதையடுத்து முடியின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் போதிய அளவு நமக்குக் கிடைப்பதில்லை. இந்த இரண்டு தவறுகளையும் சரிசெய்து, கீழ்வரும் நான்கு டிப்ஸ்களை பின்பற்றினால் முடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.
முடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் வேலை வேர்க்கால்களை பலப்படுத்தி உறுதியாக வைத்திருக்கச் செய்வது தான். வேர்க்கால்களை உறுதியாக்குவதற்கு சூரிய ஒளி மிகப்பெரிய பலமாக இருக்கும்.
மாலையில் சூரிய மறையும் நேரத்தில் வெளிப்படும் சிவப்பு நிற சூரியக் கதிர்வீச்சில் (ரெட் ரெய்ஸ்) அதிகமாக இருக்கும். இவை நம்முடைய முடியின் வேர்க்கால்களை உறுதியாக்கும்.
நாம் தவிர்க்க வேண்டிய விஷயமும் ஒன்று இருக்கிறது. அது அதிகமாக போன் பயன்படுத்துவது. அளவுக்கு அதிகமாக போன் பயன்படுத்தும்போது அதிலிருந்து வெளிப்படும் நீல வெளிச்சம் நம்முடைய முடியின் வேர்க்கால்களை பலமிழக்கச் செய்யும். அதனால் அதிக நேரம் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
மக்னீசியம் சத்து நம்முடைய தலைமுடியின் வளர்ச்சியில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் உங்களுடைய டயட்டில் மக்னீசியம் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.
குறிப்பாக மக்னீசியம், சத்து அதிகமுள்ள பாதாம், வாழைப்பழம், கீரை வகைகள் ஆகியவை தினசரி உணவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் டி முடியின் வளர்ச்சிக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்தாகும். அதனால் வைட்டமின் டி நிறைந்த உணவுகளான பால், முட்டை, சீஸ், காளான் ஆகியவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது அவை, முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.
கருத்து தெரிவிக்க