இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

இன்று மாலை 5 மணி முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறை

காலி முகத்திடலை அண்மித்த பகுதியில் இன்று டிசம்பர் 31, 2023 மாலை 5 மணி முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.

திட்டமிடப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகளே இதற்குக் காரணம் எனவே சாரதிகளும் அதற்கேற்ப தமது பாதைகளைத் திட்டமிடுமாறும், தாமதங்களை எதிர்பார்க்குமாறும் அறிவுறுத்துகிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ.

வீதி மூடல்கள் மற்றும் மாற்று வழிகள் உள்ளிட்ட போக்குவரத்துத் திட்டத்தின் குறிப்பிட்ட விவரங்கள் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்து தெரிவிக்க