உலகம்வெளிநாட்டு செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்திய நியூசிலாந்தில் 2ம் கட்ட ஊரடங்கு உத்தரவு!

நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளார்.

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதற்கிடையில், நியூசிலாந்தில் கடந்த 100 நாட்களாக உள்ளூர் மக்கள் யாருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை என நேற்று முன்தினம் அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது.

இருப்பினும், 102 நாட்களுக்கு பின் மீண்டும் கொரோனா பரவத்தொடங்கியுள்ளதால் நியூசிலாந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதனால் நாடு முழுவதும் 2 ஆம் கட்ட எச்சரிக்கை அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க