இந்தியா

பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் முதலீகளை மேற்கொள்ள பிரதமர் அழைப்பு விடுப்பு!

New Delhi: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் 12 லட்சத்தினை நெருங்கிக்கொண்டிருக்கக்கூடிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று, இந்திய அமெரிக்க வர்த்தக கவுன்சில் உச்சி மாநாட்டில் “அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் முதலீடு செய்யுமாறு” கேட்டுக் கொண்டார்.

இந்தியா ஐடியாஸ் என்கிற தளத்தில் உரையாற்றிய பிரதமர், பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தனியார் முதலீடுகளை மேற்கொள்ள அரசாங்கம் முதலீட்டாளர்களுக்கு வசதி செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இன்று, இந்தியா மீது உலகளாவிய நம்பிக்கை உள்ளது. ஏனென்றால், இந்தியா திறந்தவெளி, வாய்ப்புகள் மற்றும் விருப்பங்களின் சரியான கலவையை வழங்குகிறது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

“ஒவ்வொரு ஆண்டும், நாங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் சாதனை அளவை எட்டியுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் முந்தைய ஆண்டை விட கணிசமாக அதிகமாக உள்ளது. 2019-20ல் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 74 பில்லியன் டாலர்களாக இருந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 20 சதவீத அதிகரிப்பு.” என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க