உலகம்

சுலைமானி படுகொலை : ட்ரம்ப்பிற்கு பிடியாணை

ஈரானிய இராணுவ தளபதி சுலைமானியின் படுகொலை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 30 பேரை கைது செய்ய ஈரான் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஈரான் நாட்டின் குர்து படையின் தளபதி குவாசிம் சுலைமானி , கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் திகதி டெஹ்ரான் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அமெரிக்க அதிரடி படையினர் நடத்திய தாக்குதலில் அவர் பலியானார்.இச் சம்பவம் ஈரானுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா தகுந்த விலை கொடுக்க நேரிடும் என ஈரான் எச்சரித்தது.

இதற்கு பழி தீர்க்கும் விதமாக ஜனவரி மாதம் 8 ஆம் திகதி ஈரானில் உள்ள அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியது. ஆனாலும் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. கொரோனா பரவலில் யுத்த அபாயம் சற்று தணிந்திருந்தது‌.

இந்த நிலையில் சுலைமானியின் கொலை வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உட்பட 30  உயர் அதிகாரிகளுக்கு  ஈரான் அதிரடியாக பிடியாணை பிறப்பித்துள்ளது. ட்ரம்ப்பை கைது செய்ய இன்டர்போல் உதவ வேண்டும் எனவும் ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. இதனால் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க