ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்துள் 6791 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் கொரோனா வைரஸால் புதிதாக பாதிக்கப்பட்டோர் , உயிரிழந்தோர் தொடர்பான சமீபத்திய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரஷ்யாவின் 83 பிராந்தியங்களில் புதிதாக 6791 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 2198 பேருக்கு எந்த வித அறிகுறிகளும் தென்படவில்லை. அதனைத் தொடர்ந்து அங்கு பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 6 34 437 ஆக உயர்ந்து உள்ளது.
மேலும் 104 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலியானோரின் எண்ணிக்கை 9 073 ஆக உயர்ந்து உள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 5 735 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 3 99 087 பேர் குணமடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க