இலங்கை

இலங்கையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சலை தொடர்ந்து எலிக்காய்ச்சல்!

இலங்கையில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தொடர்ந்து தற்போது எலிக்காய்ச்சல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் மழையுடனான காலநிலை காணப்படுவதால் இதன் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எலிக்காய்ச்சலானது எலி, பெருச்சாலிகள் மற்றும் எருமைமாடுகள் போன்றனவற்றின் சிறுநீரகங்களிலிருக்கும் பக்டீரியா சிறுநீருடன் சுற்றுச்சூழலில் வெளியிடப்படுவதால்; மனிதர்களின் உடலுக்கு வெட்டுக்காயங்கள், கீறல்கள், கண்கள் மற்றும் வாயினூடாக பரவுகிறது. மேலும், இதன் அறிகுறிகளாக தீடீர் காய்ச்சல், தசைவலி, தொண்டைப்புண் மற்றும் முதுகுவலி அத்துடன் கண் சிவத்தல், வாந்தி, தலைவலி, குறைந்தளவு சிறுநீர் வெளியேறுதல் மற்றும் மலச்சிக்கல் போன்றனவாகும். இவ் அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கும் போதே வைத்தியரை நாடினால் நோயாளிகள் காப்பாற்றபடலாம் எனவும் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்

கருத்து தெரிவிக்க