உலகம்

கறுப்பினத்தவரின் கொலையை கண்டித்து தொடரும் ஆர்ப்பாட்டம் — பொலிசாரின் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்தவரான ஜோர்ஜ் என்பவர், பொலிசாரால் உயிரிழந்தமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டங்கள் வலுத்து வருகின்றன.

அமெரிக்க நகரங்களில் ஆறாவது நாளாகவும் வன்முறைகள் வெடித்து வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக 40 நகரங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதனை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரரோடு பொலிசார் மோதி உள்ளதுடன், 4400 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன், பல நகரங்களில் உள்ள கடைகள் சூறையாடப்பட்டுள்ளன.

இந்நிலையில் லூவிஸ்விலே நகரில் ஆர்ப்பாட்டக்காரரை அடக்குவதற்காக துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க