கொரோனா வைரஸ் குறைந்து வரும் நாடுகளில், நோய்த் தொற்று பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளை விரைவில் தளர்த்தி விட்டால், உடனடியாக இரண்டாவது அலையை எதிர் கொள்ளக் கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
பல நாடுகளில் கொரோனா பாதிப்புகள் குறைந்து கொண்டே போனாலும், அவை தென் அமெரிக்கா, தெற்காசியா, மற்றும் ஆபிரிக்காவில் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றன என உலக சுகாதார அமைப்பின் அவசர நிலைத் தலைவர் டொக்டர் மைக் றியான் கூறியுள்ளார்.
முதல் அலையை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைவில் நீக்கப்படுமாயின், தொற்று விகிதங்கள் மீண்டும் மிக விரைவாக உயர வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் நோய் எந்த நேரத்திலும் உயரக் கூடும் என்பதனை நாம் அறிந்து இருக்க வேண்டும். பொது சுகாதாரம், சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் போன்றவை தொடர்ந்தும் அமுலில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க