உலகம்

அமெரிக்காவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்தது!

சீனாவின் வுகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நோய் சீனாவில் ஏற்படுத்திய பாதிப்பை விட ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் தான் பாரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை விகிதத்தில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. அமெரிக்காவில் இன்று புதிதாக 6774 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 17 13 000 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 0021 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 86 64 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க