ஜோதிடம்

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி ? (15.10.2019 )

மேஷம்

குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளால் நற்பலன் உண்டு. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

ரிஷபம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் மூலம் சிறு மனச் சங்கடங்கள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களை அனுசரித்துச் சென்றால் உதவிகள் கிடைக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படும். பணம் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களளில் இருந்த இடையூறுகள் விலகும்.

மிதுனம்

இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.  புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அரச வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு திடீர் பணவரவு ஏற்படும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். பொன் பொருள் சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களில் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

நீங்கள் நினைத்த காரியங்கள் கைகூடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். வேலை தேடுவோருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறி செயற்படுவர். குடும்பத்தினருடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.

கன்னி

இன்று உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். வீண் மனக் கவலைகள் உண்டாகும். அறிமுகம் இல்லாதவர்களுடன் உரையாடுவதை தவிர்க்கவும். திருமண முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. பயணங்களில் கவனம் தேவை.

துலாம்

இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் இரட்டிப்பாகும். வியாபாரத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

விருச்சிகம்

இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். திருமண முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள்.

தனுசு

இன்று உங்களுக்கு உறவினர்களால் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் இலாபம் அடைவீர்கள்.  வீண் செலவுகளால் சேமிப்பு குறையும். உத்தியோகத்தில் வேலைச் சுமை குறையும். கடன் பிரச்சனைகள் விலகும்.

மகரம்

இன்று குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை அடைவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தர்களுக்கு வேலையில் ஈடுபாடு குறையக் கூடும்.

கும்பம்

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி தரும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெண்கள் வீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். கடன்கள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.

மீனம்

இன்று உங்களுக்கு பிள்ளைகள் வழியில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம். பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும்.

கருத்து தெரிவிக்க