ரஷ்யாவில் நடைபெறும் 11 வது உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில், 48 கிலோ எடைப்பிரிவின் இறுதி போட்டியில், ரஷ்ய வீராங்கனை எகத்ரீனாவிடம் மஞ்சு ராணி மோதினார்.
விறுவிறுப்பான இந்த போட்டியில் 1 க்கு 4 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்த மஞ்சு ராணி, தனது அறிமுக உலக போட்டியிலேயே வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இந்திய ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.
இதற்கு முன், 2001ல் மேரி கோம் வெள்ளி பதக்கத்தை கைப்பற்றி இருந்தார். ஒட்டுமொத்தமாக, நடப்பு உலக சாம்பியன்ஷிப்பில் இந்திய அணிக்கு ஒரு வெள்ளி, மூன்று வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்கள் கிடைத்துள்ளன.
கருத்து தெரிவிக்க