சினிமா

மம்முட்டியின் வரலாற்று படத்திற்காக உருவான கேம்!

வரலாற்றுப் படமாக உருவாகியுள்ள படம் ‘மாமாங்கம்’. இது மாமாங்கமத்தை மையப்படுத்தியும் வரலாற்று வீரரான சேவர் என்பவரைப் பற்றியும் தான் இந்த படம் உருவாகியுள்ளது.  படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பிராச்சி தெஹ்லான் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் பத்மகுமார் இயக்கியுள்ளார். நவம்பர் 21ம் திகதி இந்த படம் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளை தற்போது ஆரம்பித்துள்ளார்கள். அதன் முதற்கட்டமாக இந்த படத்தின் கருவை மையமாக வைத்து  டெம்பிள் ரன் போன்ற ஒரு ஆண்ட்ராய்டு கேமை உருவாக்கி உள்ளனர். பிரபல இயக்குனர்கள் பி உன்னிகிருஷ்ணன் மற்றும் ராம் ஆகியோர் முன்னிலையில் இந்த ஆண்ட்ராய்டு கேமை மம்முட்டி நேற்று வெளியிட்டுள்ளார். இளைஞர்களை கவரும் வகையில் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க