உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னங்கள்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்குசீட்டுக்களில் வழங்கப்படும் பெயர்களையும் அவர்களின் சின்னங்களையும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

2019 நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இதில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இதற்காக வாக்குசீட்டுக்கள் 26 அங்குல நீளத்தில் அச்சிடப்படுகின்றன.

இது இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஒன்றில் அதிக நீளம் கொண்ட வாக்குச்சீட்டாக வரலாற்றில் பதிவுப்பெறுகிறது.

வாக்குசீட்டில் பெயர் – கட்சி மற்றும் முழுப்பெயர் -சின்னம்

1)அப்பரக்கே புண்ணியானந்த தேரர்- அப்ஹீத்த சப்புமல் சேனாநாயக்க- நாய்

2)எஸ் அமரசிங்க- களஞ்சி தேவகே இசுறு சந்துரங்க குணசேன- அணில்

3) ஐதுருஸ் மொஹமட் இலியாஸ்- மொஹமட் சலீப் மொஹமட் நஸ்மீர்- கால்பந்து

4) ஏ.எச்.எம் அலவி- குணரட்ன அதிகாரி முனசிங்க பியால் தேவப்பிரிய குணரட்ன – டயர்

5) ஆரியவன்ச திஸநாயக்க- ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி- கழுகு

6)பி.எம் எதிரிசிங்க- ஒக்கோமா வாசியோ ஒக்கோமா ராஜவரு சன்விடனாயா – உண்டியல்

7)சரத் கீர்த்திரத்ன- திஸான் மஞ்சுள வெல்லாலகே- கிட்டார்

8) சந்திரசேகர ஹேரத் ஹிடிஹாமி கோரல்லாகே சமன்சிறி- பி.எம்.ஜே. துஸார மெண்டிஸ்- கிரிக்கட் துடுப்பு

9)சிறிதுங்க ஜெயசூரிய- ஐக்கிய சோசலிசக் கட்சி- முச்சக்கர வண்டி

10) அஜந்தா டி சொய்ஸா- ருஹ_னு ஜனதா முன்னணி- அன்னாசி

11)அருண டி சொய்ஸா- ஜனநாயக தேசிய இயக்கம்- மோட்டார் கார்

12) அநுரகுமார திஸாநாயக்க- மக்கள் சக்திக்கான தேசிய இயக்கம்- திசைக்காட்டி

13) துமிந்த நாகமுவ- முன்னணி சோசலிசக்கட்சி- பெரிய சம்மட்டி

14) ரொஹான் பல்லேவத்த- ஜாதிக சங்வர்த்தன பெரமுன- தேங்காய்

15)கெட்டகொட ஜயந்த- வெள்ளவத்த ஆராச்சிகே துமிந்து சத்துரங்க சில்வா- காண்டாமிருகம்

16) சமன் பெரேரா- எங்கள் சக்தி மக்கள் கட்சி- கொடி

17) அநுருத்த போகல்லாகம- கொஸ்வத்த கோசல ஹரிப்பிரிய பெரேரா- ஹெலிகொப்டர்

18)வர்ணகுலசூரிய மில்ரோய் சேர்ஜஸ் பெர்ணான்டோ- பண்டார லொக்குகே ரொஹான் உதயங்க பெர்ணான்டோ- மான்

19) சஜித் பிரேமதாஸ- புதிய ஜனநாயக முன்னணி- அன்னம்

20)பத்தரமுல்ல சீலரட்ன தேரர்- ஜன செத்தபெரமுன- உழவுயந்திரம்

21)பெத்தே கமகே நந்திமித்ர- நவ சமசமாஜக்கட்சி- மேசை

22)சரத் மனமேந்திரா- நவ சிஹல உறுமய- அம்பும் வில்லும்

23) எம்.கே. சிவாஜிலிங்கம்- சசிதரன் ஆனந்தி- மீன்

24)எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்- மொஹமட் சகாப்தீன் மொஹமட் இக்ரம்- ஒட்டகம்.

25) கோட்டாபய ராஜபக்ச- ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன- மொட்டு

26) நாமல் ராஜபக்ச- தேசிய ஒற்றுமை முன்னணி- மூக்குக்கண்ணாடி

27)ஏ.எஸ்.பி லியனகே- இலங்கை தொழிலாளர் கட்சி- கங்காரு

28) அசோக வடிகமங்காவ- வீரவன்னி முதியான்சலாகே சுமுது ஜெயமாலி வீரவன்னி- எப்பல்

29) பியசிறி விஜயநாயக்க- வனசிங்க ஆராச்சிலாகே ரஞ்சித் வனசிங்க- கேடயம்

30) அஜந்த பெரேரா- இலங்கை சோசலிஸ கட்சி- பலூன்

31) ரஜீவ விஜேசிங்க- பண்டாரகே சரத் புத்ததாஸ- ஆந்தை

32) பானி விஜேசிறிவர்த்தன- சோசலிச சமத்துவக்கட்சி- கத்தரிக்கோல்

33) சமரவீர வீரவன்னி- குமாரசிங்க விதானலாகே டொன் நளினி பத்மலதா- கரும்பலகை

34) சுப்பிரமணியம் குணரத்னம்- எங்கள் தேசிய முன்னணி- தொலைபேசி

35) மகேஸ் சேனாநாயக்க- தேசிய மக்கள் கட்சி- மின்சாரக்குமிழ்

கருத்து தெரிவிக்க