நிபந்தனைகளின் அடிப்படையில் ஐதேகவின் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளியாகிய தகவல்களை கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச நிராகரித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார அதிபர் முறையை ஒழிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில், சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார் என்றும், ரணில்- சஜித் உள்ளிட்ட ஐதேக மூத்த உறுப்பினர்களின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும் மத்துகமவில் நேற்று நடந்த பாரிய பேரணியில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, தாம் எந்த நிபந்தனைகளுக்கும் இணங்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
”அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்காக எனது சுய மரியாதையை இழப்பதற்கு நான் தயாராக இல்லை.
எந்தவொரு முன் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு, ஒரு கைப்பாவையாக இருக்கப் போவதில்லை” என்றும் என்று கூறினார்.
கருத்து தெரிவிக்க