தொடரூந்து சேவையாளர்கள் ஆரம்பித்த வேலை நிறுத்தப்பபோராட்டம் காரணமாக, நள்ளிரவு முதல் மலையகத்திற்கான சகல தொடரூந்து சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் தொடரூந்துதில் பயணஞ் செய்யும் மாணவர்கள், அரச ஊழியர்கள் உட்பட பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மலையக பகுதியில் உள்ள புகையிரத நிலையங்களின் கதவுகள் யாவும் பூட்டப்பட்டு இருந்ததுடன், பயணிகள் ஓய்வு அறை, உணவகம் உட்பட அனைத்தும் பூட்டப்பட்டிருந்தன.
குறித்த வேலை நிறுத்தப் போராட்டம் சம்பள பிரச்சினை உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரூந்து தொழிற்சங்க ஊழியர்கள் குறித்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எது எவ்வாறான போதிலும் தொடரூந்து சேவையினை அத்தியாவசிய சேவையாக பிரகடணப்படுத்தி, வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள நிலையில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றமையால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க