தாம் கொல்லப்படுவேன் என்பதை சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
மத்துகமையில் இன்று இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விக்கிரமதுங்க, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் நட்பைக் கொண்டவர் என்ற அடிப்படையில் அவர் கொல்லப்படமாட்டார் என்று ராஜபக்ச உறுதியளித்திருந்தார்.
எனினும் மிக் விமானக்கொள்வனவு மோசடியை வெளிக்கொணர்ந்த பின்னர் அவர் கொல்லப்பட்டார்.
விக்கிரமதுங்க ஜனவரி 8, 2009 அன்று ரத்மலானை அலுவலகத்துக்கு சென்றுக்கொண்டிந்த வழியில் கொல்லப்பட்டார்.
இந்தக்கொலைக்கு ராஜபக்ச அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
எனினும் அந்த அரசாங்கம் அதனை மறுத்தது.
கருத்து தெரிவிக்க