உள்நாட்டு செய்திகள்புதியவை

அமைச்சரவை 15ஆக மட்டுப்படுத்தப்படும்- ரொஹான் பெல்லேவத்த

ரொஹான் பல்லேவத்த ஜனாதிபதியாக களமிறங்கும் ஸ்ரீலங்கா சமூக ஜனநாயக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்க ஆட்சி முறை உட்பட்ட பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

முன்னணி வர்த்தகரான ரொஹான் பல்லேவத்த ஜனாதிபதியாக போட்டியிடவுள்ளார் என்று அறிவிப்பு இன்று கொழும்பில் வெளியிடப்பட்டது.

இந்தநிலையில் அவர் சார்ந்த தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சகல கட்சிகளும் நம்பும் கட்சியாக மாறுதல் என்ற நோக்கம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இரு பயங்கரமான கிளர்ச்சிகள், வடக்குக் கிழக்கில் இடம்பெற்ற மூன்று தசாப்த காலயுத்தம், ஊழல் மற்றும் திரும்பத் திரும்ப ஏற்படும் இயற்கை பேரழிவுகள் காரணமாக எம்மால் பொருளாதார வளர்ச்சியை அடைய முடியது போயுள்ளது.

எனவே, எமது நாடானது சுயமாக எழுந்;து நடக்கும் பொருளாதார சக்தியை நாம் கட்டியெழுப்புவோம் என்பது உட்பட்ட பல அம்சங்கள் இந்த விஞ்ஞாபனத்தில் அடங்கியுள்ளன.

பிரதமர் உள்ளிட்டதாக அமைச்சரவையை 15 அமைச்சுக்களுக்கு நாம் மட்டுப்படுத்தி அதே அளவு பிரதி அமைச்சர்களையே நாம் நியமிப்போம்.

நிகழ்ச்சித்திட்ட அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், சிரேஷ்ட அமைச்சர்கள் போன்ற மறைந்த அமைச்சுக்களை ஏற்படுத்துவதனை நாம் இல்லாதொழிப்போம்.

நாட்டின் தலைவர் உட்பட சகல அரசியல்வாதிகளினதும் ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பான உரிமைகளை நாம் இரத்துச் செய்வோம்.

அரச சேவையில் இருக்கும் பணிகளற்ற மேலதிக ஊழியர்களை மாத்திரம் உள்வாங்குவதன ; மூலமாக ஒரு உதிரி காவல்துறைப்படையை நாம் உருவாக்குவோம்.

காவல்துறை சட்டத்தின்; 56 ஆவது பிரிவுற்கு அமைய காவல்துறையினரால்; மேற்கொள்ளப்படாத கடமைகளில் இவர்கள் ஈடுபத்தப்படுவார்கள்.

அதிக இன, மத, கலாசார நல்லிணக்கத்தையும் நாட்டின் தேசிய நல்லிணக்கத்தையும் பாதுகாக்கும் நோக்கில் வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் துர்மொழிப்பாவனை, இன,மத ரீதியான பிரசார நடவடிக்கைகளையும் தூற்றுதல்களையும் தடைசெய்ய நாம் புதிய சட்டங்களை அறிமுகம் செய்வோம்.

4) இன, மத, கலாச்சார நல்லிணக்கத்தையும் நாட்டின் தேசிய சமரசத்தையும் பேணுவதற்கு வெறுப்புக் குற்றச் சட்டத்தை நாம் அறிமுகம் செய்வோம்.

எமது சமூகத்தின் பெண்களினது பயனுள்ள அபிவிருத்திக்கும் அவர்கள் சமூக, கலாசார,பொருளாதார, அரசியல் மற்றும் அபிவிருத்தி போன்;ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் தேவையான சட்ட வரையறைகளை நாம் முன்னுரிமை அம்சமாக கவனத்தில் கொண்டு அமுல்படுத்துவோம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மற்றும் வட மத்திய பகுதிகளில் வாழும் குடியிருப்பாளர்களின் அபிலாஷைகளை நாம் நிறைவு செய்வோம். இதன்போது எல்லா நிலைமைகளுக்கும் ஈடுகொடுக்கக்கூடிய அணுகுமுறையை கொண்ட வீடமைப்புக்களை நாம் ஏற்படுத்துவோம்.

கருத்து தெரிவிக்க