வேதனம் ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் தொடரூந்து வேலைநிறுத்தம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தொடரூந்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
குறித்த வேலைநிறுத்தம் இன்று (25) நள்ளிரவு முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரவு அஞ்சல் தொடரூந்துகளும் இன்று நள்ளிரவு முதல் தங்கள் சேவைகளை நிறுத்திவிடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஸ்டைன் மாஸ்டர்கள், தொடரூந்து கட்டுப்பாட்டாளர்கள், ஆபரேட்டர்கள் உள்ளிட்ட தொடரூந்து அதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்க உள்ளனர்.
பொதுச் சேவை சம்பள உயர்வை சந்தித்த போதிலும், தொடரூந்து ஊழியர்களின் வேதனை பிரச்சனைக்கு இதுவரை தீர்வு கிடைக்கப்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கருத்து தெரிவிக்க