திருகோணமலை சீனன் குடா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மாபிள் பீச் பிரதேசத்தில்
இன்று இறந்த நிலையில் சீனன் குடா விமானப்படை தளத்தில் கடமையாற்றும் விரர்
ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக சீனன் குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் E.A.D.K.எதிரிசிங்க எனும் பெயருடையவர் என்றும் ஓகந்த வீதி,பன்னிப்பிட்டிய
பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவித்தனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில்
வைக்கப்பட்டுள்ளது.
விமாப்படை வீரரின் மரணம் தொடர்பான காரணத்தை கண்டரியும் பொருட்டு மேலதிக விசாரணையை சீனன் குடா பொலிஸார் மேற்கொள்வதாக தெரிவித்தனர்.
கருத்து தெரிவிக்க