இந்தியா

மோடி 2-வது முறையாக பதவியேற்ற ஒராண்டு நிறைவு விழா – கொண்டாட பா.ஜ.க முடிவு

கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை தக்க வைத்தது.

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 303 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஆட்சியை பாஜக (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தக்க வைத்துக் கொண்டது. இதன் மூலம், நாட்டின் பிரதமராக தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்று வரலாற்று பெருமையை நேரு, இந்திரா காந்தி ஆகியோருக்கு அடுத்தபடியாக நரேந்திர மோடி பெற்றார்.

பிரதமராக 2-வது முறையாக நரேந்திர மோடி பதவியேற்று வரும் 30ஆம் தேதி பா.ஜ.க ஒராண்டு ஆட்சியை நிறைவு செய்கிறது. இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு வருடங்களாக நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.

பாஜக ஆட்சிக்கு வந்த பின், காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியது, முத்தலாக் சட்டம் நிறைவேற்றப்பட்டது, அயோத்தி வழக்கை சுமூகமாக முடித்தது. இந்நிலையில் வரும் 30ஆம் தேதி ஓராண்டு நிறைவு விழாவை நாடு முழுவதும் கொண்டாட அந்தக் கட்சி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கருத்து தெரிவிக்க