இலங்கை

இலங்கையில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது!

இலங்கையில் கொரோனா தாக்கத்தின் இரண்டாவது கட்ட ஆட்டம் ஆரம்பிக்கலாம் எனவும் அவ்வாறிருப்பின் அது இலங்கைக்கு பேராபத்தாக இருக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பு ஆசியா மற்றும் அமெரிக்கா நாட்களுக்கு இரண்டாவது கொரோனா அலை தொடர்பில் எச்சரித்துள்ளது. அதனடிப்படையில், இலங்கையை பொறுத்தவரையில் கொரோனாவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500 தாண்டியுள்ளது. இதில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள் மற்றும் நாட்டின் கடற்படை சிப்பாய்களுமே அதிகமாவர். இவர்களை உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய தவறுமிடத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என அரச வைத்திய அதிகாரி சங்கத்தின் உதவி செயலாளர் நவீன் டீ சொய்ஷா தெரிவித்துள்ளார். ஆகவே, சமூக இடைவெளியை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், கிருமிநாசினி தெளித்தல் மற்றும் சுய தனிமைப்படுத்தல் என்பனவற்றை பாதுகாப்புடன் செயற்படுத்தல் கட்டாயம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்து தெரிவிக்க