டெங்கு பரவும் இடங்களை இனங்கண்டு அவற்றை அழிப்பதற்கான இருநாள் சிரமதான நிகழ்வு மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட திராய்மடுப் பிரதசத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.
வெளியிடங்களிலிருந்து வருபரினாலும் டெங்கு தொற்று வருவதை தடுக்கும் நோக்கோடு நகரத்தை அண்டிய திராய்மடு புகையிரத தண்டவாளத்திற்கு அருகில் உள்ள தாவரங்கள் அகற்றப்பட்டதோடு அண்டிய மதகு நீர் நிலைகளும் துப்பரவு செய்யப்பட்டன.
வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் கால மழை ஆரம்பமாகியுள்ள நிலையில் திராய்மடு பிரதேசத்தில் டெங்கு பரவும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்காக வீடு வீடாகப் பரிசோதனை செய்யும் நடவடிக்கை சனிக்கிழமை (21) இடம்பெற்றது.
மட்டக்களப்பில் 1112 பேரும், மண்முனை வடக்குப் பிரதேசத்தில் 165 பேரும் மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட கொக்குவில் பொதுச் சுகாதாரப் பிரிவில் உள்ள திராய்மடு பிரதேசத்தில் 8 பேரும் டெங்கு தொற்றிக்கு உள்ளாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி கே.கிரிசுதன் தெரிவித்தார்.
திராய்மடு பிரதேசத்தில் வீடு வீடாகப் பரிசோதனை செய்து டெங்குக் குடம்பிகள் உள்ள இடங்களை வைத்திருப்பவர்களை கண்டித்ததோடு அடுத்த பரிசோனையின் போது துப்பரவு செய்யப்படாமல் உள்ளவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் எச்சரித்தனர்.
இப்பரிசோதனையில் மட்டக்களப்பு மாநகர சபையின் சுகாதார நிலையியற் குழுவின் தலைவர் சிவம் பாக்கியநாதன், மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் ஐ.சிறிதரன், சிரேஷ்ட பொதுச் சுகாதாரப் பரிசோதகர் கே.ஜெயரஞ்சன், உள்ளிட்ட பலரும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.
கருத்து தெரிவிக்க