தமக்கும் எவென்காட் ஆயுதக்களஞ்சிய நிறுவனப்பணிப்பாளர் நிசங்க சேனாதிபதிக்கும் இடையிலான தொலைபேசி உரையாடலை முழுமையாக வெளியிடுமாறு மன்றாடியார் நாயகமும் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான தில்ருக்ஸி டயஸ் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
எவென்காட் சம்பவம் வெளியானதன் பின்னர் தமக்கும் சேனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடலை, சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்று வரும் நிசாங்க சேனாதிபதி பேஸ்புக்கின் ஊடாக வெளியிட்டிருந்தார்.
அதில் எவென்காட் சம்பவம் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுத்தமைக்கு தாம் வருந்துவதாக தில்ருக்ஸி கூறியதாக குரல் பதிவு இருந்தது.
தமக்கு சட்டத்தை மாற்றவும் உருவாக்கவும் முடியும் என்றும் தில்ருக்ஸி அதில் தெரிவித்திருந்தார்.
இந்த குரல் பதிவு வெளியானதன் பின்னர் இது தொடர்பில் தில்ருக்ஸின் மீது விசாரணை நடத்தப்படவேண்டும் என்று பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் அரசாங்க பணியாளர் என்ற வகையில் தாம் இதற்கு பதிலளிப்பதாக தமது பேஸ்புக்கில் கூறியுள்ள தில்ருக்ஸி, சேனாதிபதி குறித்த தொலைபேசி உரையாடலின் முழு வடிவத்தையும் வெளியிடவேண்டும் என்று கேட்டுள்ளார்.
அவரால் தற்போது வெளியிடப்பட்டுள்;ள குரல் பதிவு மாற்றியமைக்கப்பட்ட ஒன்று.
எனவே செம்மையாக்கப்படாத குரல் பதிவை அவர் வெளியிடவேண்டும்.
அத்துடன்; அவர் முதலில் தொடர்பு கொண்ட அமைச்சர் யார் என்பதையும் அவர் ஏன் தம்முடன் இந்த விடயத்தை பேசுமாறு கேட்டுக்கொண்ட விடயத்தையும் சேனாதிபதி வெளியிடவேண்டும் என்றும் தில்ருக்ஸி கோரியுள்ளார்.
கருத்து தெரிவிக்க