தென்னாசியாவின் அதி உயரமான தாமரை கோபுர நிர்மாணிப்பின்போது 2 பில்லியன் ரூபாய்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டதாக இலங்கை ஜனாதிபதி வெளியிட்ட குற்றச்சாட்டை சீனாவின் அரச நிர்மாண நிறுவனமான ஏஎல்ஐடி மறுத்துள்ளது.
கடந்த திங்கட்கிழமையன்று 356 மீற்றர் உயரமான தாமரை கோபுரத்தை திறந்து வைத்த ஜனாதிபதி 2பில்லியன் ரூபாய்கள் நிர்மாணத்தின் போது முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏஎல்ஐடி நிர்மாணித்த இந்த கோபுரத்துக்கான நிதியில் 80வீதத்தை சீனாவின் எக்சிம் வங்கி வழங்கியிருந்தது.
கருத்து தெரிவிக்க