நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்கும் வகையிலான அவசர அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் இணக்கத்துடனேயே கூட்டப்பட்டது.
இந்த தகவலை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் எ சுமந்திரன் வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே 2015ஆம் ஆண்டு தேர்தலின்போது நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காகவே வாக்குகள் கேட்கப்பட்டன.
அது கிடைத்தபோதும் இதுவரை நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை.
இந்தநிலையில் 11வது மணித்தியாலத்தில் இந்த முயற்சி கடந்த வியாழக்கிழமையன்று அமைச்சரவைக் கூட்டத்தில் தோற்றுப்போயுள்ளது.
20வது திருத்தத்தை கொண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எனினும் ஜனாதிபதி தேர்தல் ஒன்று நடத்தப்படவுள்ளநிலையில் ஜேவிபி ஏற்கனவே சமர்ப்பித்துள்ள இந்த யோசனையை நிறைவேற்றுவது ஜனாதிபதி தேர்தல் களத்தில் உள்ளவர்களை இலக்கு வைத்த நடவடிக்கை என்ற வகையில் சிறுபான்மைக்கட்சிகள் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
எனினும் நல்லதை செய்வதற்கு கெட்ட நேரத்தை பார்க்க தேவையில்லை என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க