திருகோணமலை – கருமலையூற்று,வெள்ளைமணல் எனும் முகவரியை வசிப்பிடமாகக் கொண்ட ஜௌபர் சாதிக் முஹம்மது ஜௌஸ் உதவி பொலிஸ் பரிசோதகராக (SI)கடமையாற்றி வந்த நிலையில் பொலிஸ் பரிசோதகராக (IP) யாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இதனை இலங்கை பொலிஸ் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவித்துள்ளது.
குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவின் புடவைக் கட்டு பகுதியினை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சரின் பாதுகாப்பு பிரிவின் பிரதம அதிகாரியாகவும் செயற்பட்டு வருவதுடன் இவர் அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் விசேட பயிற்சியினையும் பூர்த்தி செய்தவராவார்.தம்பலகாம பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார்.
தனது ஆரம்ப கல்வியை கொழும்பு அல்நஸார் மகாவித்தியாலயம் மற்றும் கொட்டாஞ்சேனை விவேகானந்தா கல்லூரியில் தனது உயர் கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றுள்ளார்.
மேலும் திரியாய் கள்ளம்பத்தை பாடசாலையில் இரு வருடங்களாக ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.
இவர் ஜௌபர் சாதிக் மற்றும் நோனா பலீலா ஆகிய தம்பதிகளின் கனிஷ்டபுதல்வருமாவார்.
கருத்து தெரிவிக்க