உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்சமீபத்திய செய்திகள்புதியவை

சர்வதேச கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தின் திருமலை மாவட்ட நிகழ்வு

சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்துகை தினத்தைக் கொண்டாடுதல் மற்றும் சர்வதேச
கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தின் திருகோணமலை மாவட்ட நிகழ்வு
இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) காலை நடைபெற்றது .

ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலில் நடைபெறும் இந்த கடற்கரை கடற்கரை
சுத்தப்படுத்துதல் செயற்பாடானது மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின்
கீழுள்ள கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றது.

இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (20) திருகோணமலை சமுத்ராம பிரதேசத்தில்
கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு மாகாண உதவி
முகாமையாளர் ரி. ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில், பிரதம
அதிதியாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராசா கலந்து கொண்டார்.

அத்துடன், திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் எஸ்.அருள்ராஜா,
நகர சபைத் தவிசாளர், உப்புவெளி பிரதேச சபையின் தவிசாளர் உள்ளிட்டோரும் கலந்து
கொண்டனர்.

இன்றைய கடற்கரை சுத்தப்படுத்தலின் போது கடற்படையினர், மீனவர் சங்கங்கள்,
ரோற்றரி கழகத்தினர், லயன்ஸ் கழகத்தினர், திருகோணமலையிலுள்ள சீமெந்து மற்றும்
எண்ணைக் ;கம்பனிகள், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள்,பிரதேச பாடசாலை
மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கு கொண்டனர்.

இதன்போது, திருகோணமலை சமுத்திராகம கடற்கரை, நகரின் பிரதான கடற்கரை,
மட்டிக்கழி கடற்கரை, உட்துறைமுகக் கடற்கரை உள்ளிட்ட கிலோமீற்றர் வரையான
பிரதேசம் சுத்தப்படுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திற்கான சர்வதேச கடற்கரை சுத்தப்படுத்துகை தினத்தைக்
கொண்டாடுதல் மற்றும் சர்வதேச கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரத்தின்
நிகழ்வுகளின் ஒழுங்கில் கடந்த 16ஆம் திகதி மூதூர் தக்வா நகர், 17ஆம் திகதி வெருகல்
பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இலங்கைத்துறை முகத்துவாரம் பிரதேசம், 18ஆம்
திகதி புதன்கிழமை கிண்ணியா மாஞ்சோலை பிரதேசசம், 19ஆம் தேதி திருகோணமலை
துறைமுகத்தை அண்டிய பிரதேசம் கியன சுத்தப்படுத்தப்பட்டதுடன், நாளை திருகோணமலை சாகரபுரம் கடற்கரை சுத்தப்படுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க